உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காந்திமாநகர் அரசுப் பள்ளியில் சுவையான அறுசுவை நல்விருந்து

 காந்திமாநகர் அரசுப் பள்ளியில் சுவையான அறுசுவை நல்விருந்து

காந்திமாநகர்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரிடையே, 'விருந்தோம்பல்' பண்பை வளர்க்கும் விதமாக, அவர்களுக்கு 'நல்விருந்து' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காந்திமாநகர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு, சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. பள்ளியில் பயிலும் 350க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பாரம்பரிய முறையில் வாழை இலையிட்டு உணவு பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் சாதம், வடை, பாயாசம், அப்பளம், பொரியல் மற்றும் இனிப்பு உள்ளிட்ட அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் (எஸ்.எம்.சி.,) ஒத்துழைப்புடன், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு, உணவை பரிமாறினார்கள். 'அரசுப் பள்ளிகளில் இத்தகைய மாற்றங்கள், மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க உதவும்' என, தலைமையாசிரியர் விஜயலட்சுமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி