உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழங்குடியின மக்களுக்காக நுாலகம் அதிரப்பள்ளியில் திறப்பால் மகிழ்ச்சி

பழங்குடியின மக்களுக்காக நுாலகம் அதிரப்பள்ளியில் திறப்பால் மகிழ்ச்சி

வால்பாறை: அதிரப்பள்ளி கப்பாயம் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் புதிய நுாலகம் திறக்கப்பட்டது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து, சுற்றுலா பயணியர் அதிக அளவில் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கின்றனர்.மளுக்கப்பாறை அருகே, அதிரப்பள்ளி செல்லும் வழியில் கப்பாயம் என்ற பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மென்ட் உள்ளது. இங்கு, 36 குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டை நோக்கமாக கொண்டு, மாநில வன மேம்பாட்டு நிறுவனம், மலையனுார் மேம்பாட்டு முகமை மற்றும் களமஞ்சேரி ராஜகிரி மேல்நிலைப்பள்ளி இணைந்து, கதிர் நுாலகத்திற்கு தேவையான நுால்களை வழங்கினர்.புதிய நுாலகத்தை மளுக்கப்பாறை சமுதாய நலக்கூடத்தில் மலையனுார் கோட்ட வன அலுவலர் ஆசிப் திறந்து வைத்தார்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மனித - வனவிலங்கு மோதலை தடுக்கவும், வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கவும் பழங்குடியின மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆயிரம் நுால்களை கொண்ட நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. நுாலகத்தில் போதிய அளவு புத்தகங்கள் உள்ளன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை