உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி போனஸ் கோரி டான்டீயில் ஆர்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் கோரி டான்டீயில் ஆர்ப்பாட்டம்

வால்பாறை : தீபாவளி போனஸ் வழங்க கோரி, டான்டீ தோழிலாளர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வால்பாறை, நீலகிரி, கூடலுார், குன்னுார், சேரம்பாடி உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசுக்கு சொந்தமான 'டான்டீ' தேயிலை தோட்டம் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவித்தது.ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 'டான்டீ' தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நேற்று வரை போனஸ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 'டான்டீ' தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வால்பாறை அடுத்துள்ள சின்கோனா(டான்டீ) தேயிலை தொழிலாளர்கள் எஸ்டேட் அலுவலகத்தின் முன் நேற்று மாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ