உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பின், திருப்பூர் வடக்கு மாவட்ட வாகன வியாபாரிகள் சங்கம் சார்பில் அவிநாசியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், 430 பிரிவின் கீழ் ஆர்.சி., (வாகன உரிமம்) புக்கை தபாலில் அனுப்புவதை ரத்து செய்து, நேரடியாக வழங்குவதை நிறைவேற்ற வேண்டும். கணினிமயமாக்கப்பட்ட பின் ஸ்மார்ட் கார்டு வழங்குவதில், காலதாமதம் கூடாது.வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை