மேலும் செய்திகள்
தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'
30-Sep-2025
கோவை; பருவ மழை காலங்களில், டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் சுற்றுப்புறங்களை துாய்மையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக 1,500 களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ''கோ வையில் வாரந்தோறும் 5-6 பேர் டெங்கு பாதித்து சிகிச்சை பெறுகின்றனர். வாரந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி, பாதிப்பு தடுப்பு நடவடிக்கை ஆலோசிக்கப்படுகிறது. வீடு, வீடாக கண்காணிப்பு பணி தொடர்கிறது. பொதுமக்கள் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்காத வகையில், கவனம் செலுத்த வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை நன்றாக மூடி வைப்பதும், அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டியதும் அவசியம். காய்ச்சல் ஏற்பட்டால், சுயமாக மருந்து சாப்பிடுவதை தவிர்த்து, டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும்,'' என்றார்.
30-Sep-2025