உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெங்கு பரப்பும் பொருட்கள் பறிமுதல் செய்யும் போட்டி

டெங்கு பரப்பும் பொருட்கள் பறிமுதல் செய்யும் போட்டி

கோவை: சென்னைக்கு அடுத்து, கோவையில் அதிக டெங்கு பாதிப்பு பதிவானது. அதை கட்டுப்படுத்த மண்டல வாரியாக தூய்மை பணியாளர்களிடையே போட்டி நடத்தப்பட்டது. டெங்கு பரப்பும் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதிக பொருட்களை பறிமுதல் செய்த அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. டி.பி.எல்., ‘அதிரடி சரவெடி’ என 2 'டோர்னமென்ட்' நடந்தது. அடுத்ததாக, கல்லூரி மாணவர்களிடையே டெங்கு பொருட்கள் பறிமுதல் செய்யும் போட்டி துவங்கியுள்ளது. முதல்கட்டமாக தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் 5-10 கல்லூரிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 3 நாட்கள் பொருட்கள் பறிமுதல் செய்ய வேண்டும். அதிக பொருட்கள் பறிமுதல் செய்யும் 2 கல்லூரிகளை தேர்வு செய்து, மண்டலவாரியாக இறுதி போட்டி நடக்கும். வெற்றி பெறும் அணிக்கு பரிசு வழங்கப்படும் என மாநகராட்சி கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ