ரூ.192.73 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணி
கோவை: மாநகராட்சி பகுதிகளில் ரூ.192.73 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகள் நேற்று துவக்கப்பட்டன. அதன்படி, வடக்கு மண்டலம், 30வது வார்டு, கணபதி அரசுப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம், 11வது வார்டு சவுடாம்பிகா நகரில் ரூ.39.40 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணி, சரவணம்பட்டி ஆஸ்பத்திரி வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கட்டடம், கிழக்கு மண்டலம், 23வது வார்டு கோல்டுவின்ஸ், பூம்புகார் நகரில் ரூ.23.23 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை என, ரூ.192.73 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளை எம்.பி., ராஜ்குமார் துவக்கிவைத்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மண்டல தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.