உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவை ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணி; ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவை : கோவை ரயில்வே ஸ்டேஷனில், மேம்பாட்டு பணிகள், மேற்கொள்ளப்படுவதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. l ஈரோடு - கோவை (06801) ரயில், வரும், 21, 22, 23 மற்றும், 25 ம் தேதிகளில், இருகூர் வரை இயக்கப்படும்.l பாலக்காடு டவுன் - கோவை(06806) ரயில் வரும், 21, 23, 25ம் தேதிகளில் போத்தனுார் வரை இயக்கப்படும்.l மதுரை - கோவை (16722) ரயில், வரும், 21, 23, 25ம் தேதிகளில் போத்தனுார் வரை இயக்கப்படும்.l மேட்டுப்பாளையம் - போத்தனுார்(06009) ரயில் வரும், 21, 23, 25ம் தேதிகளில் கோவை சந்திப்பு வரை இயக்கப்படும். வரும், 22 ம் தேதி வடகோவை ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டும் இயக்கப்படும்.l ஷொர்னுார் - கோவை(06458) ரயில் வரும், 21, 23, 25ம் தேதிகளில் போத்தனுார் வரை இயக்கப்படும்.போத்தனுார் - மேட்டுப்பாளையம்(06812) ரயில், வரும், 22ம் தேதி போத்தனுார் - வடகோவை ரயில்வே ஸ்டேஷன் இடையே இயக்கப்படாது. வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து காலை, 10:02 மணிக்கு புறப்படும். மேலும், 23 மற்றும் 25ம் தேதிகளில், போத்தனுார் - கோவை இடையே இயக்கப்படாது. அந்த நாட்களில், கோவையில் இருந்து காலை, 10:02 மணிக்கு புறப்படும்.கோவை - ஷொர்னுார்(06805) ரயில் வரும், 22, 23 மற்றும், 25 ம் தேதிகளில், கோவை - போத்தனுார் இடையே இயக்கப்படாது. அந்த நாட்களில், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதியம், 12:05 மணிக்கு புறப்படும்.கோவை - கண்ணுார்(16608) ரயில், வரும், 23 மற்றும், 25 ம் தேதிகளில், கோவை - போத்தனுார் இடையே இயக்கப்படாது. அந்த நாட்களில், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதியம், 2:03 மணிக்கு புறப்படும்.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

l வரும், 22ம் தேதி, பாட்னா - எர்ணாகுளம்(22644) மற்றும் சில்சார் - திருவனந்தபுரம்(12508) எக்ஸ்பிரஸ் ரயில்கள், இருகூர் - போத்தனுார் வழியாக இயக்கப்படும்.l வரும், 22, 23 மற்றும் 25ம் தேதிகளில் சென்னை எழும்பூர் - மங்களூர்(16159) எக்ஸ்பிரஸ், திருப்ருகா - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்(22504), ஆலப்புழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ், டில்லி - திருவனந்தபுரம்(12626) எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு(12678) எக்ஸ்பிரஸ் ரயில்கள் இருகூர் - போத்தனுார் மற்றும், போத்தனுார் - இருகூர் வழியாக இயக்கப்படும்.l ஈரோடு - பாலக்காடு டவுன்(06819) ரயில், வரும், 23 மற்றும், 25ம் தேதிகளில், இருகூர் - போத்தனுார் வழியாக இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ