மேலும் செய்திகள்
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
26-Mar-2025
தொண்டாமுத்தூர்: வெள்ளியங்கிரி மலையில், பாறையில் இருந்து வழுக்கி விழுந்த பக்தர் உயிரிழந்தார்.தூத்துக்குடி மாவட்டம், மேலூர், மாப்பிள்ளையூரணியை சேர்ந்தவர் புவனேஷ்,18; கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 17ம் தேதி இரவு, தனது நண்பர்கள் இருவருடன், வெள்ளியங்கிரி மலை ஏறி, நேற்றுமுன்தினம் மாலை, ஏழாவது மலையில் உள்ள ஈசனை தரிசித்தார்.அதன் பின் கீழே இறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, சாரல் மழை பெய்தது. மழையால், சிறிது நேரம் நின்றுவிட்டு, அங்கிருந்த பாறை மீது ஏறி நின்றுள்ளார். அப்போது, ஈரமாக இருந்த பாறை வழுக்கி, சுமார் 10 அடி ஆழத்தில் விழுந்தார்.இதில், புவனேஷ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வனத்துறையினர் அவரை, நேற்று காலை, அடிவாரத்திற்கு துாக்கி வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே புவனேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26-Mar-2025