உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு

கோவை: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ்,42; தனியார் வங்கி ஊழியர். மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனது நண்பர்களுடன், கடந்த 9ம் தேதி இரவு, கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிவிட்டு, நேற்று அதிகாலை, கீழே இறங்கிக்கொண்டிருந்தார். ஆறாவது மலை இறங்கும்போது, ரமேஷ் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். அருகிலிருந்தவர்கள் மீட்டு, வனத்துறையினரின் உதவியுடன், அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ரமேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ