சர்க்கரை நோயினால் தலை முதல் கால் வரை பாதிப்பு
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், தலை முதல் பாதம் வரை ஏராளமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் டாக்டர் பாலமுருகன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதற்கு உணவியல் நிபுணர் பரிந்துரை செய்யப்பட்ட உணவு முறையையே பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி மூலமும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோய் உறுதி செய்த பிறகு மருந்து மாத்திரைகள் அல்லது இன்சுலினை மருத்துவரின் ஆலோசனைப்படி சரியாக பின்பற்ற வேண்டும். கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சார்பில், இன்று முதல் (நவ.,14) வரும் 30ம் தேதி வரை, நீரிழிவு நோயாளிகளுக்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் நீரிழிவு நோய், கண், சிறுநீரகம், நியூரோ மற்றும் எலும்பு ஆகியவற்றிற்கான ஆலோசனை, 50 சதவீதம் சிறப்பு சலுகை கட்டணத்தில் வழங்கப்படுகிறது.மேலும், மருத்துவ மனை வளாகத்தில், காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை உணவு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.