கே.எம்.சி.எச்.,ல் வரும் 30ல் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்
கோவை, அவிநாசி ரோடு, பீளமேட்டில் அமைந்துள்ளது, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை. இம்மருத்துவமனை சார்பில், ஒரு நாள் சர்க்கரை பாதிப்பு கண்டறிதல் மற்றும் சர்க்கரை பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கும் முகாம் வரும், 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.கே.எம்.சி.எச்., நிர்வாகத்தினர் கூறியதாவது:சர்க்கரை பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதனை வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பாதிப்பு உள்ளது தெரிந்தால், அதற்கான சிகிச்சைகளை உடனடியாக மேற்கொண்டு, சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.சர்க்கரை நோய் சிறப்பு முகாம், அவிநாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச்.,ல் நடத்தப்படுகிறது. வரும் 30ம் தேதி ஒரு நாள் மட்டும் இம்முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை, 7:00 முதல் மதியம், 12:00 மணி வரை முகாம் நடக்கிறது.இதில், ரத்தத்தில் சர்க்கரை அளவு, 3 மாத சராசரி சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு, சிறுநீர் பரிசோதனை, ஹீமோகுளோபின் பரிசோதனை, ரத்தத்தில் உப்பு, தைராய்டு ஆகிய பரிசோதனைகள் சலுகை கட்டணத்தில் ரூ.1,500க்கு மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனையில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளுக்கு, கட்டணத்தில் 25 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது.முகாமின் சிறப்பு அம்சங்களாக நீரிழிவு நோய் பராமரிப்பு வழிகாட்டுதல், கால் பராமரிப்பு, உணவு கண்காட்சி உணவு ஆலோசனை, சர்க்கரை நோய் மருத்துவரின் ஆலோசனையும் வழங்கப்படும்.இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், எடை குறைதல், அதிக பசி, தாமதமாக குணமாகும் காயங்கள் மற்றும் புண்கள், மிகவும் சோர்வாக உணர்வது, கை அல்லது கால்களில் மரத்துப்போகும் உணர்வு மற்றும் உணர்வின்மை, வலி, மங்கலான கண் பார்வை போன்ற பிரச்னைகள் உள்ளோர் மற்றும் ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.இந்த ஒரு நாள் முகாமில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்வது அவசியம். முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 98940 08800 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.