மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025
கோவை: கோவை, 'தி ஐ பவுண்டேஷன்', உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. ஆர்.எஸ்.புரம், தி ஐ பவுண்டேஷன் வளாகத்தில் கோவை மாநகர காவல் போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் அசோக் குமார், கொடியசைத்து துவக்கி வைத்தார். டாக்டர் ஜதிந்தர் சிங் பேசுகையில், “நீரிழிவு நோய், இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கிறது. ஆனால் அதன் கண் ஆரோக்கியத்திற்கான தாக்கம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. உண்மையில், நீரிழிவு ரெட்டினோபதியால் ஏற்படும் பார்வை இழப்பு, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், பெருமளவு தவிர்க்கக்கூடியது, '' என்றார். தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனையின் டாக்டர் ராமமூர்த்தி, மூத்த நிபுணர் டாக்டர் தென்னரசு, மருத்துவ குழுமத்தின் திட்ட பிரிவு துணை தலைவர் கிருஷ்ண குமார், சி.ஓ. ஓ., அர்ஜுன் மற்றும் மூத்த நிபுணர் டாக்டர் ஆஷ்ரயா நாயக்கா ஆகியோர் பங்கேற்றனர்.
21-Oct-2025