கூடுதல் கட்டடம் தயார் திறக்காததால் சிரமம்
கோவில்பாளையம்: கட்டி முடித்து பல மாதங்களாகியும், நுாலக கூடுதல் கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில், கிளை நுாலகம், 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. நுாலக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2024ம் ஆண்டு கூடுதல் கட்டடம் கட்ட, 22 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. வாசகர்கள் கூறுகையில், ‘கிளை நூலகம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், வேலை தேடுவோருக்கும், பணியில் இருந்து ஓய்வு பெற்றோருக்கும், மிக உதவியாக உள்ளது. பல ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. ஆனால் மிகச் சிறிய கட்டடம் மட்டுமே உள்ளது. வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே படித்து வருகின்றனர். கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை திறந்து வாசகர்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும்’ என்றனர்.