மேலும் செய்திகள்
வாகன விபத்தில் ஒருவர் காயம்
26-Apr-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில், டிஜிட்டல் சர்வே பணிகள் தீவிரமாக நடக்கிறது.தமிழகம் முழுவதும் அரசு சார்பில் விளை நிலங்கள் டிஜிட்டல் சர்வே செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு ஒன்றியத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி டிஜிட்டல் சர்வே பணிகள் துவங்கப்பட்டது.ஒன்றியத்துக்கு உட்பட்ட, 34 ஊராட்சிகளில், தற்போது வரை, 17 ஊராட்சிகளில் கோடை கால பயிர் சாகுபடி பரப்பு சர்வே பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதம் உள்ள ஊராட்சிகளில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதில், வேளாண், தோட்டக்கலை மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் கிராம தங்கல் திட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்று வருகின்றார். இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) அருள்கவிதா தெரிவித்தார்.
26-Apr-2025