தினமலர் - பட்டம் மெகா வினாடி- வினா போட்டி; உடனுக்குடன் பதிலளித்து அசத்திய மாணவர்கள்
கோவை; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில் மாணவ, மாணவியர் உடனுக்குடன் பதிலளித்தனர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும், 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் அக்., 8ம் தேதி துவங்கியது. இவர்களுடன், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில், இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும்.இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.* சிங்காநல்லுார் அருகே பி.வி.எம்., குளோபல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த, வினாடி-வினா போட்டியில், 31 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'சி' அணியை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர் ராகுல் சுப்ரமணியம், எட்டாம் வகுப்பு மாணவர் அன்புசெல்வன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் சைதாசப்ரஷ், துணை முதல்வர் ஸ்ரீலதா ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் ஆர்த்திகா, ஆசிரியர் கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.* தொண்டாமுத்துார், இதழ் நேஷனல் பப்ளிக் பள்ளியில், 50 பேர் தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். போட்டியின் நிறைவில், 'ஜி' அணியை சேர்ந்த, ஐந்தாம் வகுப்பு மாணவி விஷ்வதிகா, 9ம் வகுப்பு மாணவி பாரிகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி தாளாளர் வனிதா, முதல்வர் லோகேஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஆசிரியர்கள் வித்யஸ்ரீ, தீபா, சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.