உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் செய்தி எதிரொலி; ‘அப்டேட்’ ஆனது வெப்சைட்

தினமலர் செய்தி எதிரொலி; ‘அப்டேட்’ ஆனது வெப்சைட்

கோவை: மாநகராட்சி வெப்சைட்டில் ஆர்.டி.ஐ. பிரிவு 3 ஆண்டுகளாக அப்டேட் செய்யவில்லை. மாநகராட்சியில் துணை கமிஷனர் தான், ஆர்.டி.ஐ. விண்ணப்பங்களுக்கான மேல்முறையீட்டு அதிகாரி. 2023ம் ஆண்டு மாநகராட்சி துணை கமிஷனராக இருந்த ஷர்மிளா பெயரே வெப்சைட்டில் இருந்தது. பொறியியல், நகரமைப்பு, சுகாதாரம், மண்டல உதவி கமிஷனர்களிலும் 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய பழைய அதிகாரிகளின் பெயர்களே ஆர்.டி.ஐ. பிரிவுக்கான அதிகாரிகள் பெயர்களாக குறிப்பிடப்பட்டிருந்தன. இதுகுறித்து கடந்த 17ம் தேதி நமது நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் பழைய அதிகாரிகளின் பெயர்களை நீக்கிவிட்டு, தற்போதைய ஆர்.டி.ஐ. பிரிவுக்கான அதிகாரிகளின் பெயர்களுடன் வெப்சைட்டில் அப்டேட் செய்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி