உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தினமலர் நலம் பேசுவோம் நிகழ்ச்சி; கேள்விகளை இன்றே அனுப்பணும்

 தினமலர் நலம் பேசுவோம் நிகழ்ச்சி; கேள்விகளை இன்றே அனுப்பணும்

கோவை: 'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பில், 'நலம் பேசுவோம்-நலமுடன் வாழ்வோம்' இணையவழி நிகழ்ச்சி, நாளை நடக்கிறது. போதிய விழிப்புணர்வு இருந்தால், புற்று நோயை வரும் முன் தடுத்துவிட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். விழிப்புண்வு ஏற்படுத்த, 'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கே.எம்.சி.ஹெச்.,) சார்பில், 'நலம் பேசுவோம்- நலமுடன் வாழ்வோம்' என்ற இணையவழி நிகழ்ச்சி, நாளை (3ம் தேதி) நடக்கிறது. இதில், புற்று நோய் வரும் முன் காப்பது எப்படி, வந்த பின் என்ன செய்யலாம், உணவு முறை, அறிகுறிகள், தடுப்பூசி உள்ளிட்ட தகவல்களுடன்,புற்று நோய்க்கான நவீன சிகிச்சைகள் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும், கே.எம்.சி.ஹெச்., சிறப்பு புற்றுநோய் மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். கதிர்வீச்சு புற்று நோயியல் சிகிச்சை நிபுணர் ஆனந்த் நாராயணன், நியூக்ளியர் மற் றும் பெட்/சி.டி., ஸ்கேன் துறையின் மருத்துவர் கமலேஸ்வரன் ஆகியோர், பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, புற்றுநோய் பற்றிய கேள்விகளை, 87549 87509 என்ற 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு இன்றைக்குள்(டிச. 2) அனுப்ப வேண்டும். கேள்விக்கான பதில்கள் நாளை காலை, 11:30 முதல், 12:30 மணிக்குள் தினமலர் சமூக வலைதளத்தில், காணொளி வாயிலாக வெளியாகும். விவரங்களுக்கு, கியூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்யலாம் அல்லது, www.dmrnxt.in/nalam என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை