உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி: சார்ஜிங் லைட்டர் புதுவரவு

தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி: சார்ஜிங் லைட்டர் புதுவரவு

சார்ஜிங் லைட்டர்: அடிக்கடி லைட்டரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. சார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளும் லைட்டர், கண்காட்சிக்கு புதுவரவு. 5 கிலோ தாங்கும் ஹூக்: கீ செயின் முதல் சின்னச் சின்ன பொருட்கள் வரை ஆணி அடிக்காமல் மாட்ட, ஹூக்கள் விற்பனையாகின்றன. 5 கிலோ வரை தாங்கும் 'ஸ்ட்ராங் குளூ ஹூக்' விற்பனைக்கு உள்ளது. எடையைக் கட்டி தொங்கவிட்டு அதன் வலிமையை காட்சிப்படுத்தியுள்ளனர். சாண ஊதுபத்தி: மற்ற ஊதுபத்திகள் 15 நிமிடங்கள்தான் எரியும். ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்களுக்காக மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட ஊதுபத்தி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது, ஒரு மணி நேரம் வரை மணம் பரப்பும். சந்தனம், தேன், இந்து கஸ்துாரி என வெவ்வேறு நறுமணங்களில் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !