உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாரியை கடத்திச் சென்ற திண்டுக்கல் நபர் கைது

லாரியை கடத்திச் சென்ற திண்டுக்கல் நபர் கைது

கோவை, ; பீளமேடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை, திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன், 48; லாரி ஓட்டுநர். கோவையில் தொட்டிபாளையம் பகுதியில் உள்ள, ஒரு கட்டுமான நிறுவனத்திற்காக லாரி ஓட்டி வந்தார். கடந்த 20ம் தேதி இரவு, லாரியை தொட்டிபாளையத்தில் உள்ள லாரி அலுவலகத்தில் நிறுத்தி விட்டு, ஓய்வு எடுக்க சென்றார். இந்நிலையில், அவரது நண்பர் ஒருவர் நள்ளிரவில், காளீஸ்வரனை போனில் அழைத்து, காளீஸ்வரனின் லாரியை வேறு ஒரு நபர், சூலுார் பகுதியில் ஓட்டிச்செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து, லாரி திருடப்பட்டது குறித்து காளீஸ்வரன், தனது நண்பரிடம் தெரிவித்தார். பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சூலுார் பகுதியில் சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்து, லாரி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, அவர் திண்டுக்கல் மாவட்டம் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த விக்னேஷ்வரன், 34 என்பது தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை