உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புரோசோன் மாலில் டைனோசர் வேர்ல்டு

புரோசோன் மாலில் டைனோசர் வேர்ல்டு

கோவை:கோவை புரோஜோன் மாலில், உலகின் முக்கிய ஈர்ப்பான புரோஜோன் டைனோசர் வேர்ல்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் துவங்கியுள்ள இந்த டைனோசர் வேர்ல்டு, வரும், 20ம் தேதி வரை குழந்தைகள், பெரியவர்களை குஷிப்படுத்தி வருகிறது. மாலின் பிரதான பகுதியில் அமைந்துள்ள, இந்த டைனோசர் வேர்ல்டுக்குள் நுழைந்தாலே பல்வேறு டைனோசர்களை பார்க்க முடியும். நிஜ டைனோசர்கள் போல் ஒவ்வொன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன. துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மும்பை, ஐதராபாத், பெங்களூரு, புனே ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட இந்த டைனோசர் வேர்ல்டு நிகழ்ச்சி, முதல் முறையாக தமிழகத்தில், நம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ