மேலும் செய்திகள்
தொழில் பயிற்சி அட்மிஷன் வரும் 30 வரை நீட்டிப்பு
15-Sep-2025
-- நமது நிருபர் -காங்கயத்தில் செயல்படும், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. காங்கேயத்தில் உள்ள ஐ.டி.ஐ.,யில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், ஒன்பது, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தவறியவர்களும், வரும் 30ம்தேதிக்குள் விண்ணப்பித்து, தொழிற்பயிற்சியில் சேரலாம். அனைத்து மாணவ, மாணவியருக்கும் மாதந்தோறும் 750 ரூபாய் உதவித்தொகை மற்றும் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பயிற்சியில் இணைவோருக்கு, இலவச சீருடை, சைக்கிள், பாட புத்தகங்கள், வரைபட கருவிகள், லேப்டாப் மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவோருக்கு, நிறுவனங்களில் தொழில் பழகுனர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 97908 38912 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
15-Sep-2025