உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருச்சி - திருநெல்வேலிக்கு நேரடி பஸ் சேவை தேவை

திருச்சி - திருநெல்வேலிக்கு நேரடி பஸ் சேவை தேவை

வால்பாறை,; வால்பாறையில் இருந்து, திருச்சி - திருநெல்வேலிக்கு நேரடி பஸ் இயக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி, கோவை, பழநி, சேலம், திருப்பூர், மன்னார்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடி பஸ் சேவை உள்ளது. திருச்சி, திருநெல்வேலிக்கு பஸ் சேவை இல்லை. இதனால்தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். தொழிலாளர்கள் கூறியதாவது: கடந்த மூன்று தலைமுறைகளாக வால்பாறை மலைப்பகுதியில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். குறிப்பாக, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளோம். இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல, வால்பாறையில் இருந்து, 64 கி.மீ., தொலைவில் உள்ள பொள்ளாச்சிக்கு சென்று, பல மணி நேரம் காத்திருந்து பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி, வால்பாறையில் இருந்து திருச்சி, திருநெல்வேலிக்கு நேரடி அரசு பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ