உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை; சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடந்த நிகழ்விற்கு, ராயல் கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.அவர், ''மாற்றுத்திறனாளிகளின் உரிமை மற்றும் நல்வாழ்வை, சமூகத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் பரப்பி, அவர்களின் மேம்பாட்டை பொது மக்களிடையே ஊக்குவிக்க வேண்டும்,'' என்று வலியுறுத்தினார்.தேசிய பாரா டி.டி., சாம்பியன் அவினாஷ், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பங்கேற்றவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் தின சிறப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 'ஹை பை' எனும் இயக்கத்தில் பலர், தங்கள் கைரேகையை பதிவு செய்தனர்.உடல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு துறை ஆலோசகர் பிரியவதனா, ஆலோசகர் விஜய் குமார் மண்டா, மருத்துவ இயக்குனர் பரந்தாமன் சேதுபதி, முதன்மை செயல்பாட்டு அதிகாரி மணி செந்தில்குமார், மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !