உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானிய கோரிக்கையில் ஏமாற்றம்; ரேஷன் ஊழியர்கள் வேதனை

மானிய கோரிக்கையில் ஏமாற்றம்; ரேஷன் ஊழியர்கள் வேதனை

பொள்ளாச்சி; கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில், எவ்வித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக ரேஷன்கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில், ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்புகள் வெளியாகும் என காத்திருந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில் ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் அறிவிப்பாக வெளியாகும் என, காத்திருந்தோம். ஆனால், ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த, ஏழு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கான அறிவிப்பும் இல்லை.தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று, தனித்துறை உருவாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை. எதிர்பார்த்த அறிவிப்புகள் எதுவும் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி