உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை 

ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை 

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாரின் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.கோவை அருகே, தொப்பம்பட்டி மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லுாரியில், போலீஸ் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.அணைப்பகுதியில் இரண்டு பேர் தண்ணீரில் தத்தளிப்பது போல் சப்தம் போட, அவர்களை மீட்க கயிறை வீசி லாவகமாக மீட்பது குறித்து ரிசர்வ் படையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து, தண்ணீரில் சிக்கிய நபரை மீட்டு சிகிச்சை அளிப்பது, மழை வெள்ள காலங்களில், கைகளில் கிடைக்கும் தண்ணீர் காலி பாட்டில்களை பயன்படுத்தி வெள்ளத்தில் மூழ்காமல் தண்ணீரில் நீந்தும் விதம், மழை வெள்ளம், தண்ணீர் அதிக ஆழமாக இருந்தால் எவ்வாறு கண்டுபிடிப்பது குறித்து விளக்கப்பட்டது.தண்ணீரில் சிக்கி தவிப்போரை, ரப்பர் படகில் சென்று மீட்பது குறித்தும் விளக்கப்பட்டது. இப்பயிற்சியில், போலீஸ் பிரிவில் பணியாற்றும், 87 வீரர்கள், ஏழு பயிற்சியாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி