உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.ஆர்.பி.எப்., போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

சி.ஆர்.பி.எப்., போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ஆழியாறு அணையில், மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை அருகே தொப்பம்பட்டியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லுாரியில் பணியாற்றும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணைக்கு போலீசார் வந்தனர். தொடர்ந்து, அவர்களுக்கு, ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகையுடன் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து பேரிடர் மீட்பு குழுவினர் கூறியதாவது:- மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லுாரியில் பணியாற்றும் 89 வீரர்களுக்கு, 10 பயிற்சியாளர்கள் வாயிலாக பேரிடர் மீட்புக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. வெள்ளத்தில் ஒருவர் சிக்கினால் பதட்டம் அடையாமல், முதலில் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு மீட்பு பணியில் ஈடுபட வேண்டும். வெள்ளத்தில் சிக்கியவர்களை காலி குடிநீர் பாட்டில்கள், கேன்களை பயன்படுத்தி மீட்பது, லைப் ஜாக்கெட், கயிறு கொண்டு மீட்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மீட்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் விழிப் புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை