உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேதமடைந்த தடுப்பை சீரமைக்காததால் அதிருப்தி

சேதமடைந்த தடுப்பை சீரமைக்காததால் அதிருப்தி

நெகமம் : நெகமம் நாகர் மைதானம் செல்லும் வழியில் உள்ள தடுப்புகள் சரிந்ததால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.நெகமம் பகுதியில், பொள்ளாச்சி ரோட்டில் இருந்து நாகர் மைதானம் செல்லும் வழித்தடத்தின் ஓரத்தில், ஒரு பகுதியில் கடைகளும் மற்றொரு புறத்தில் கால்வாயும் உள்ளது. இதில் கால்வாய் ஓரத்தில் தடுப்புகள் உள்ளது. இந்த ரோட்டில் பஸ், பைக் உள்ளிட்ட வாகனங்கள் அதிகம் செல்கின்றன.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், இந்த தடுப்பின் ஒரு பகுதி வாகனம் மோதியதில் சேதமடைந்தது. தடுப்பு சாய்ந்து கால்வாயில் கவிழ்ந்தது. அதன்பின், இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். ஆனால், தற்போது வரை இந்த தடுப்பு சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த குறுகலான ரோட்டில், வாகன ஓட்டுநர்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களால் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுகிறது. எனவே, ரோட்டோரம் விரைவில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை