உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீவன புல் நறுக்கும் கருவி ;பயனாளிகளுக்கு வழங்கல்

தீவன புல் நறுக்கும் கருவி ;பயனாளிகளுக்கு வழங்கல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்ட கால்நடைத்துறை சார்பில், 50 பயனாளிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் தீவன புல் நறுக்கும் கருவி வழங்கப்பட்டது. மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், நடப்பாண்டு மாநிலம் முழுவதும் உள்ள, 3,000 சிறு, குறு விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், மின்சாரத்தில் இயங்கும் தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட உள்ளன. இச்சலுகையை பெற, சிறு, குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். இரண்டு பெரிய கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், 0.25 ஏக்கர் தீவன சாகுபடி நிலத்தோடு, மின் வசதியை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன. இந்நிலையில், பொள்ளாச்சி கோட்ட கால்நடைத்துறை சார்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், தீவன புல் நறுக்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி, உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. கோவை மண்டல இணை இயக்குனர் மகாலிங்கம் தலைமை வகித்தார். துணை இயக்குனர் சரவணன், உதவி இயக்குனர் சக்ளாபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்படி, தலா, 14,504 ரூபாய் மானியத்தில், 50 பயனாளிளுக்கு, தீவன புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ