உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகளுக்கு அடையாள அட்டை உழவர் சந்தையில் வினியோகம்

விவசாயிகளுக்கு அடையாள அட்டை உழவர் சந்தையில் வினியோகம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி உழவர் சந்தையில், புதிய விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.பொள்ளாச்சி உழவர் சந்தையில், மொத்தம், 80 கடைகள் உள்ளன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், அவ்வப்போது காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும், விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் காய்கறி வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.சந்தையில், புதிய விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வேளாண் துணை இயக்குனர் (வேளாண்மை மாநில திட்டம்) விஜயகல்பனா, வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) மீனாம்பிகை ஆகியோர், 10 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கினார்.அதிகாரிகள் கூறியதாவது: உழவர் சந்தையில், விவசாயிகள் காய்கறிகள் விற்பனை செய்ய புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. விளை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.விளை பொருட்களை சந்தைப்படுத்த இலவச பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் தரத்திற்கேற்ப நியாயமான விலை நிர்ணயம் செய்யப்படும்.விவசாயிகளுக்கு மின்னணு தராசு மற்றும் கடை ஒதுக்கீடு இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய அடையாள அட்டை பெற, உழவர் சந்தை நிர்வாக அலுவலரை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ