உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானிய விலையில் சோளம் விதைகள் விநியோகம்

மானிய விலையில் சோளம் விதைகள் விநியோகம்

மேட்டுப்பாளையம்: காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் வேளாண் விரிவாக்க மையங்களில், சோளம் சி.ஓ.32 மற்றும் கே.12 ரக விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதுகுறித்து, காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியிருப்பதாவது:- ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்தில் சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பருவ மழை நன்கு பெய்துள்ளதால், சோளம் சாகுபடி செய்ய இது ஏற்ற தருணம் ஆகும். காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் வேளாண் விரிவாக்க மையங்களில், சோளம் சி.ஓ.32 மற்றும் கே.12 ரக விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரகங்களை அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்யலாம். 95 முதல் 100 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம். சோளம் விதைகளுக்கு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், ஒரு கிலோ விதைக்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டத்தின் கீழ் சோளம் சாகுபடிக்கு பொது விவசாயிக்கு, ஒரு எக்டருக்கு ரூ.1,500ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ. 2,100ம் மானியமாக வழங்கப்படுகிறது.விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையம் மற்றும் அலுவலகங்களை அணுகி இத்திட்டங்கள் தொடர்பாக பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை