உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் வங்கதேசத்தினர் ஊடுருவல்; தடுப்பதற்கு கடும் நடவடிக்கை அவசியம்!

கோவையில் வங்கதேசத்தினர் ஊடுருவல்; தடுப்பதற்கு கடும் நடவடிக்கை அவசியம்!

கோவை: தொழில்வளமிக்க கோவை மாவட்டத்துக்குள், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக ஊடுருவுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவைக்கு பணி நிமித்தமாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்காேனார் வருகின்றனர். நிரந்தர பணி அமைந்ததும், குடும்பத்தினரோடு கோவையில் தங்குகின்றனர். அதனால், 'ரியல் எஸ்டேட்' துறையும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.வட மாநில தொழிலாளர்கள் போர்வையில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், நமது நாட்டுக்குள் ஊடுருவி, கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் தங்கியிருக்கின்றனர். ஆரம்பத்தில் கட்டுமானத் துறையில் மட்டும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். அவர்கள், கட்டுமான நிறுவனங்களின் தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இப்போது, அனைத்து விதமான நிறுவனங்களிலும் பரவி இருக்கின்றனர்.இவர்களில் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் யார்; வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில், போலீசார் இடையே குழப்பம் இருக்கிறது. புரோக்கர்கள் மூலமாக நியமிப்பதால், ஆவணங்கள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. இந்த விஷயத்தில், போலீசார் அலட்சியப்போக்கையே கடைபிடிக்கின்றனர்.

திருப்பூர் தந்த பாடம்

சமீபத்தில் திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்ததில், ஆதார் அட்டைகள் போலியானதாக கண்டறியப்பட்டது. ஆகவே, கோவையிலும் ஆவணங்களை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.தொழிலாளர் நலத்துறை மூலமாக, வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகிறது. அதில், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும். அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் தங்கியிருந்தால், நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்து விடும். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து, முனைப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.

'தொழிலாளர் விபரம் அறிய அணுகலாம்'

கோவை சரக டி.ஐ.ஜி., சரவண சுந்தர் கூறியதாவது:கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் சட்ட விரோதமாக யாராவது தங்கியுள்ளார்களா என அடிக்கடி சோதனை மேற்கொள்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்து கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகளில் இருப்பவர்கள் விபரம் பெறப்படுகிறது. வடமாநில தொழிலாளர்களின் விபரம் தொழிலாளர் நலத்துறை வாயிலாக சேகரிக்கப்படுகிறது. தங்களது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் குற்றவழக்குகள், ஆட்சேபகரமான நடவடிக்கைளில் ஈடுபட்டவர்களா என்பதை அறிய, காவல்துறை அலுவலகத்தில் தொழில் நிறுவனத்தினர் கட்டணம் செலுத்தி அறிந்து கொள்ளலாம். தொழில் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரித்து வைத்திருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
செப் 29, 2024 20:44

பலே... கோயம்புத்தூரைச் சுத்தி இதுமாதிரி பாதுகாப்பு வலை எழுப்பும் டைம் வந்தாச்சு. எல்லைப் புறத்தில் கோட்டை விட்டவங்களை என்ன செய்யலாம்?


V RAMASWAMY
செப் 29, 2024 19:40

நடவடிக்கை எடுப்பதற்கும் முப்பதாயிரம் நபர்கள் நுழைந்து விடுவார்கள்.


Rasheel
செப் 29, 2024 19:23

மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கிஸ்தான் எல்லையை போல இங்கே அவ்வளவு பாதுகாப்பு இல்லை. எல்லை தாண்டுபவர்களை சுட்டு பிடித்தால் மட்டுமே இது அடங்கும். வங்காள அரசு அவர்கள் கைப்பிடியில்.


கழுகுசாமி
செப் 29, 2024 18:12

என்னவோ வங்கதேசக்காரர்கள் எல்கை கடந்து டைரக்டா தமிழகம் வந்துடற மாதிரி. எல்லை தாண்டுபவர்களை புடிச்சு திருப்பி அனுப்பாம வேடிக்கை பாக்கும் ஒன்றிய அரசு.


தேச பக்தன்
செப் 29, 2024 20:39

வங்கதேச எல்லை மாநிலமான மேற்கு வங்காளம் மம்தா ஆட்சியின் கீழ் இருக்கும் வரை இது தொடரும்


babu
செப் 29, 2024 16:14

வங்கதேச முன்னாள் பிரதமரே இங்க தான் இருக்குறாரு..


Kasimani Baskaran
செப் 29, 2024 16:01

ஓரிரு மாநிலங்களில் அந்நியர்கள்தான் யார் ஆளப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கிறார்கள். பிறகு எப்படி வௌங்கும்?


narayanansagmailcom
செப் 29, 2024 13:31

மாடல் அரசு மற்றும் போலீஸ் இணைந்து லஞ்சம் பெற்று எத்திசையும் கண்டி ஜொள்ள மாட்டார்கள்.


ஆரூர் ரங்
செப் 29, 2024 13:04

இரு நாடுகளின் எல்லைகளுக்கிடையே ஏராளமான வாய்க்கால் நதிகள் ஓடுகின்றன..முழு எல்லையையும் வேலியிட்டாலும் நீர்நிலைகள் வழியே ஊடுருவி விடுகிறார்கள். மேற்கு வங்க எல்லையில் மால்டா மாவட்டத்தில் முஸ்லிம்கள் மிக அதிகம். ராணுவம் அமைத்த வேலிகளில் பலவற்றை சிதைத்து வங்க தேச ஆட்கள் இங்கு வந்தேறி விடுகிறார்கள். இதற்கு TMC, காங்கிரஸ் கம்மி எல்லாம் உடந்தை.


venugopal s
செப் 29, 2024 16:27

மனமிருந்தால் மார்க்கம் உண்டு, பங்களாதேஷ் எல்லையை முழுவதும் அடைக்க மத்திய பாஜக அரசுக்கு மனமில்லை.அவ்வளவு தான் விஷயம்!


புதிய வீடியோ