உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்கள் உயர் கல்வி தொடர வழிகாட்டியது மாவட்ட நிர்வாகம்

மாணவர்கள் உயர் கல்வி தொடர வழிகாட்டியது மாவட்ட நிர்வாகம்

கோவை; உயர் கல்வியை தொடர விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு, வழிகாட்டி ஆலோசனை வழங்கியது மாவட்ட நிர்வாகம்.கல்லூரி கனவு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, பிளஸ் 2 முடித்த அனைத்துமாணவர்களும் உயர்கல்வியில் சேர்ந்ததை உறுதிப்படுத்தும் நோக்கில், கலெக்டர் தலைமையில் அனைத்து துறைகளிலும் உள்ள முதல் நிலை அலுவலர்களைக் கொண்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு அலுவலர் வீதம், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த அலுவலர்கள், பள்ளிக்கு நேரில் சென்று, ஆய்வு செய்தனர். உயர்கல்வியில் சேராத மாணவர்கள், உயர்கல்வி தொடர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இதையடுத்து, மாவட்ட அளவில் உயர் கல்வி வழிகாட்டி மையம் துவங்கப்பட்டது.மாவட்ட அலுவலர்களின் ஆய்வறிக்கையின்படி, 10,301 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதில் 10,020 மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்திருந்தனர். 281 மாணவர்கள் விண்ணப்பிக்காமல் இருந்தனர். மாணவர்கள் உயர் கல்வியை தொடர ஏதுவாக, மாணவர்களுக்கான குறைதீர் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் பள்ளிகள் தோறும் நியமிக்கப்பட்ட, கண்காணிப்பு அலுவலர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத, 281 மாணவர்கள் உயர்கல்வி தொடர ஆலோசனைகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை