மாவட்ட கூடைப்பந்து போட்டி
அன்னுார்; மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. அன்னுாரில் மாவட்ட அளவிலான மூன்றுக்கு மூன்று முறையிலான கூடைப்பந்து போட்டி டிரீம் டீம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட அளவில் 32 அணிகள் பங்கேற்றன. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், நேசனல் மாடல் பள்ளி, டிரீம் டீம் ஏ, முதல் இரண்டு இடங்களை பிடித்தன. 16 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ஒய்.எம்.சி.ஏ., (பி), டிரீம் டீம் (பி) ஆகியவை முதல் இரண்டு இடங்களை பிடித்தன. மாணவியருக்கான போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஒய்.எம்.சி.ஏ. சிம்பா அணிகள் முதல் இரண்டு இடங்களை வென்றன. 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் என்.ஜி.பி. யுனைடெட் கல்லுாரி முதல் இரண்டு இடங்களையும் வென்றன. வெற்றி பெற்றவர்களுக்கு தொழில் அதிபர் ரஞ்சித் பரிசு வழங்கினார். பயிற்சியாளர் ரமேஷ் மற்றும் கூடைப்பந்து வீரர்கள் பங்கேற்றனர். டிரீம் கூடைப்பந்து அகாடமியில் சிறுவர் சிறுமியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.