உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட கிரிக்கெட் சதம் விளாசிய வீரர்

மாவட்ட கிரிக்கெட் சதம் விளாசிய வீரர்

கோவை;கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில் முதலாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., - ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியும், கோவை நைட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா கல்லுாரி அணியினர், 50 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 243 ரன் எடுத்தனர். வீரர் விஜய் அபிமன்யு 117 ரன், ரித்தீஸ்வர் 39 ரன், மணி சங்கர் 37 ரன் எடுத்தார். அடுத்து விளையாடிய கோவை நைட்ஸ் அணியினர், 37.5 ஓவரில் இரு விக்கெட் இழப்புக்கு, 244 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர்கள் ராதாகிருஷ்ணன் 76 ரன், கிஷோர் 64 ரன், ஜிஜேந்திர குமார் 62 ரன் எடுத்தனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை