மேலும் செய்திகள்
சைக்கிள் போட்டி: வீரர்கள் உற்சாகம்
14-Nov-2026
கோவை: மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, திருச்சி ரோடு பெர்க்ஸ் பள்ளியில் இரு நாட்கள் நடந்தது. கோயம்புத்துார் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் நடந்த போட்டியில் 5–21 வயதுடைய மாணவ, மாணவியர் 530 பேர் பங்கேற்றனர். கட்டா, குமித்தே என இரு பிரிவுகளில் ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம்(எஸ்.ஜி.எப்.ஐ.) சார்பில் நடக்கும் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களும் இதில் பங்கேற்றனர். 76 பிரிவுகள் என ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்கள் வென்றவர்களுக்கு சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.
14-Nov-2026