உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டி

மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டி

கோவை: மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் மாணவியர் தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். மாவட்ட அளவிலான டோக்வோண்டா போட்டிகள், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் கடந்த இரு தினங்களாக நடந்தது. இதில், மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவியர் பங்கேற்றனர். மாணவியர், 14 வயது பிரிவு 30 கிலோ எடை: உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி நம்தம் பவித்ரா முதல் இடம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவி ராகவி இரண்டாம் இடம், மதர்லேண்ட் பள்ளி மாணவி தாணுஸ்ரீ மூன்றாம் இடம் பிடித்தனர். 32 கிலோ எடை : அல்வேர்னியா பள்ளி மாணவி, சிவதர்ஷிணி முதல் இடம் பிடித்தார். 34 கிலோ எடை: ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவியர், பிரீத்தி ராஜா முதல் இடம், ஜோஹானா இரண்டாம் இடம், மதர்லேண்ட் பள்ளி மாணவி ஐஸ்வர்யா மூன்றாம் இடம் பிடித்தனர். 36 கிலோ எடை:காந்தியடிகள் கல்வி நிலையம் மாணவி ரித்தன்யா முதல் இடம், உப்பிலிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவி சாரு தேஷ்ணா லலிதா இரண்டாம் இடம் பிடித்தனர். மாணவியர், 19 வயது பிரிவு 45 கிலோ எடை: அவிலா கான்வென்ட் பள்ளி மாணவி, விஷ்ணு அனிஷா முதல் இடம், பிரசண்டேஷன் கான்வென்ட் பள்ளி மாணவி ஷிபானா பர்வீன் இரண்டாம் இடம், மதர்லேண்ட் பள்ளி மாணவி ஜனனிஸ்ரீ மூன்றாம் இடம் பிடித்தனர். 48 கிலோ எடை: பெர்க்ஸ் பள்ளி மாணவி சம்ப்ரதா முதல் இடம், மதர்லேண்ட் பள்ளி மாணவி கவுரி சங்கரி இரண்டாம் இடம், அல்வேர்னியா பள்ளி மாணவி ஆராதானா மூன்றாம் இடம் பிடித்தனர். 51 கிலோ எடை: ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவி கனிஷ்கா, பிரசண்டேஷன் கான்வென்ட் பள்ளி மாணவி உம்முசுமயா, அல்வேர்னியா பள்ளி மாணவி லோகமித்ரா முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 54 கிலோ எடை: அல்வேர்னியா பள்ளி மாணவி கபிலி முதல் இடம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி மாணவி மித்தேஷா இரண்டாம் இடம், பிரசண்டேஷன் கான்வென்ட் பள்ளி மாணவி கேத்ரின் மூன்றாம் இடம் பிடித்தனர். மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டியில் மாணவியர், 17 வயது சேபர் பிரிவில், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவியர் ஸ்னேகல் விகாஸ்சுர்வ் முதல் இடம், லியோனா இரண்டாம் இடம் பிடித்தனர். பாயல் பிரிவில், காளியண்ணன்புதுார் அரசு பள்ளி மாணவி அனுஸ்ரீ, அப்பநாயக்கன்பட்டி எஸ்.வி.எச்.எஸ்., பள்ளி மாணவியர் மோனிகா இரண்டாம் இடம், பாவிஸ்ரீ மூன்றாம் இடம் பிடித்தனர். எப்பி பிரிவில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி தீக்சா முதல் இடம், அப்பநாயக்கன்பட்டி எஸ்.வி.எச்.எஸ்., பள்ளி மாணவி ரெசினா பானு இரண்டாம் இடம், காளியண்ணன்புதுார் அரசு பள்ளி மாணவி, மகந்தினி மூன்றாம் இடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை