உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட அளவிலான குழு போட்டிகள் நிறைவு

மாவட்ட அளவிலான குழு போட்டிகள் நிறைவு

மேட்டுப்பாளையம்: கோவை வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே குழு போட்டிகள் அரசூரில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில், மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளியின் சார்பில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றது. போட்டிகள் நேற்று முன் தினம் நிறைவடைந்தது. இதில் மாணவ-மாணவியர் பிரிவில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. கைப்பந்து, கையுந்து, எரிபந்து, பூப்பந்து, கபடி, கோ-கோ, மேசைப்பந்து, டென்னிஸ், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடை பெற்றன. இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மகாஜன பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினார்கள். குழு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மகாஜன பள்ளிகள் உடற்கல்வி ஆசிரியர்களும், தனியார் கல்லூரி ஆசிரியர்களும் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !