உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் விடுதிகளில் மாவட்ட அலுவலர் ஆய்வு

மாணவர் விடுதிகளில் மாவட்ட அலுவலர் ஆய்வு

வால்பாறை; வால்பாறையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை, மாவட்ட அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.வால்பாறை நகரில் உள்ள, அரசு கல்லுாரி மாணவியர் விடுதி, அண்ணாநகர் ஆதிதிராவிட மாணவியர் விடுதி, மாணவர் விடுதி, பழங்குடியின மாணவர் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த மாதம், 26ம் தேதி அமைச்சர் மதிவேந்தன் அரசு மாணவியர் விடுதியை திடீர் ஆய்வு செய்த போது, விடுதிகளில் சில குறைபாடுகள் உள்ளதை நேரில் கண்டறிந்து, விடுதி வார்டனை எச்சரித்தார்.இதனை தொடர்ந்து, அமைச்சரின் ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைகளை ஆய்வு செய்யும் வகையில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மணிமேகலை நேற்று வால்பாறையில் உள்ள மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளில் ஆய்வு செய்தார். அதன்பின், எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல், ஹாஸ்டல் வார்டன்கள் சிறப்பாக செயல்பட வேண்டும், என, அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி