மாவட்ட வாலிபால் போட்டி; தடாகம், வெள்ளக்கிணறு வெற்றி
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்து வரும், மாவட்ட அளவிலான அக்வா டெக்ஸ் கோப்பைக்கான வாலிபால் போட்டியில், தடாகம், வெள்ளக்கிணறு அணிகள் வெற்றி பெற்றன.பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில், அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 24வது மாவட்ட அளவிலான அக்வா டெக்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டியில் கோவை மாவட்டத்தில் உள்ள, 32 அணிகள் விளையாடி வருகின்றன. போட்டிகள், 'நாக் அவுட்' முறையில் நடக்கின்றன.முதல் நாள் போட்டியில், தடாகம், வெள்ளக்கிணறு, கே.சி.கே., பாரதியார், இருகூர், அகர்வால், பிரண்ட்ஸ், மோகன்ராஜ் நினைவு வாலிபால் கிளப் அணிகள் வெற்றி பெற்றன. இன்று இறுதிப்போட்டி நடக்கிறது.