உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு 4,700 ரூபாய் தீபாவளி போனஸ்

ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு 4,700 ரூபாய் தீபாவளி போனஸ்

கோவை; கோவை மாநகராட்சியில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படி, 8.33 சதவீத போனஸ் வழங்க தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, குப்பை அள்ளும் ஒப்பந்த நிறுவனத்தினருடன் மாநகராட்சி அதிகாரிகள் பேசி, துாய்மை பணியாளர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு மட்டும், 4,700 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கொசு ஒழிப்பு பணியாளர்கள், குடிநீர் வினியோகிப்பாளர்கள், மழைக்கால தொழிலாளர்களுக்கு இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை. சட்டப்படி போனஸ் கேட்டு, கோவை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு செல்வம், ஜோதி உள்ளிட்டோருடன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேச்சு நடத்தினார். அப்போது, 'கடந்தாண்டு 4,500 ரூபாய் போனஸ் வழங்கப்பட்டது. நடப்பாண்டு 200 ரூபாய் அதிகமாக சேர்த்து, 4,700 ரூபாய் வழங்கப்பட்டது. இ.எஸ்.ஐ., - பி.எப்., தொடர்பாக, எந்த தொழிலாளருக்கு பிரச்னை என தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ