மேலும் செய்திகள்
வனத்தில் விறகு தேட தடை; வனத்துறை அறிவுறுத்தல்
23-Oct-2024
வால்பாறை; வால்பாறை எஸ்டேட் பகுதியில், தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதால், யானைகள் வெளியே அங்குமிங்கும் அலைமோதின.வால்பாறையில் பருவமழைக்கு பின், வனவளம் செழிப்பாக உள்ளதால், யானைகள் அதிக அளவில் எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.யானைகள் பகல் நேரத்தில் தேயிலை காட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிட்டு, தொழிலாளர்களின் வீடுகள், பள்ளி சத்துணவு கூடம், ரேஷன் கடைகளை இடித்து சேதப்படுத்துகின்றன. யானைகள் வருகையால் இரவு நேரங்களில் எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.இந்நிலையில், வால்பாறை எஸ்டேட் பகுதியில், மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடி சப்தத்தால் யானைகள் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு வர முடியாமல், வனப்பகுதியிலும், தேயிலை காட்டிலும் முகாமிட்டு, திக்குமுக்காடுகின்றன.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். அதே நேரத்தில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். அதிக சப்தம் உள்ள வெடிகளை வெடிக்க கூடாது. வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு வெடித்த இடங்களில் தீப்பொறி இருந்தால் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்,' என்றனர்.
23-Oct-2024