உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெண்டிலேட்டரில் இருக்கிறது திமுக ஆட்சி: இபிஎஸ் கிண்டல்

வெண்டிலேட்டரில் இருக்கிறது திமுக ஆட்சி: இபிஎஸ் கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குடியாத்தம்: ' திமுக ஆட்சி வெண்டிலேட்டரில் இருக்கிறது. மக்கள் கைவிட்டால் ஆட்சி குளோஸ்' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார்.பிரசார சுற்றுப்பயணத்தில் இன்று குடியாத்தத்தில் அவர் பேசியதாவது: இங்கு விவசாயம், நெசவு, தீப்பெட்டி, பீடி ஆகிய தொழிலை நம்பித்தான் மக்கள் உள்ளனர். இங்கிருந்து லுங்கிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு பல திட்டங்கள் கொடுத்தோம்.கைத்தறி துணி தேங்கியிருந்த காலத்தில் மானியம் 300 கோடி ரூபாய்க்குக் கொடுத்தோம். ஜவுளி கைத்தறி விற்பனையை பெருக்க 2019ல் ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை, ஜவுளி பன்னாட்டுக் கண்காட்சி கோவையில் நடத்தினோம். சிறிய அளவு ஜவுளி பூங்காகொண்டு வந்தோம். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். அதில், 2,818 பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர்.இப்போது தேர்தல் வர இருப்பதால் மேலும் 30 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை கொடுப்பதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். பெண்களின் கஷ்டத்தை பார்த்துக் கொடுக்க வில்லை, அதிமுக அழுத்தத்தைப் பார்த்தும், தேர்தல் காரணமாகவும் கொடுக்கிறார்.திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்து பழக்கமே இல்லை. கொரோனா காலத்தில் பிரதமர் மோடியே பாராட்டும் அளவிற்கு ஆட்சி செய்தோம். 5 ஆண்டில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். நாமே அந்தக் கடனை கட்ட வேண்டும். 73 ஆண்டு கால தமிழக வரலாற்றில் இருந்த கடனை விட திமுக அரசின் கடன் சுமை அதிகம். எப்படித்தான் ஆட்சி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆட்சி செய்வது திமுக, நிதி வாங்கிக் கொடுத்தது அதிமுக. மக்களை ஏமாற்றுவதில் திமுக கைதேர்ந்தவர்கள். காலம் போன கடைசியில், வெண்டிலேட்டரில் திமுக ஆட்சி இருக்கிறது. மக்கள் கைவிட்டால் திமுக ஆட்சி குளோஸ்.இந்தியாவிலேயே கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் முதல் மாநிலம் தமிழகம் என்றுதான் திமுக பெயர் பெற்றுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் முக்கியமான தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Easwar Kamal
ஆக 15, 2025 16:35

பல்லை காட்டாமல் கூட்டணி கட்சியுடன் செண்ர்ந்து பயணித்தால் பிஜேபி ஆசிர்வதித்தல் ஜெயிக்க வாய்ப்பு உண்டு. அடம் பிடித்தல் பிஜேபி கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டால் எதிர் கட்சி வாய்ப்பு கூட இல்லாமல் போய் விடும். எடபடியான் ஒன்தரும் ஜெயாவோ /mgr கிடையாது. ops/dinakaran / சசிகலா இல்லாமல் என்ன ஒட்டு வாங்கி உள்ளது. புரிந்து நடந்து கொண்டால் nalaaldhu. இல்லாவிட்டால் அடுத்த 5 ஆண்டில் காணாமல் கூட போகலாம்


S.L.Narasimman
ஆக 15, 2025 07:56

60 வருட ஆட்சியில் 10 கோடி லட்சம் கடன்தான் வாங்கிய நிலையில் விடியா தீமுக அரசு 4 வருட ஆட்சியில்5 கோடி லட்சம் கடன் வாங்கி தின்னு உலக சாதனை படைத்தது. எந்த கொம்பனாலும் சாதனையை முறியடிக்க முடியாது எடப்பாடியார்அவர்களே.


pmsamy
ஆக 15, 2025 06:47

கொரோனா காலத்துல ஆக்சிஜன் சரியாக கொடுக்காமல் பல உயிர்களைக் கொன்றவர் தான் எடப்பாடி


vivek
ஆக 15, 2025 07:57

அதுல நீ மிஸ் ஆயிட்டே


Kasimani Baskaran
ஆக 15, 2025 04:17

ஆத்தா/தாத்தா தீம்க்கா இரண்டும் BSC / பாட்டா க்கும் இடையிலான வித்தியாசம்தான்.


Oviya Vijay
ஆக 14, 2025 22:43

2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் இதயத் துடிப்பு எகிறினால் விடுடா வண்டிய ஆஸ்பத்திரிக்கு என்று டிரைவரிடம் கூவவும்... இதயங்கள் பத்திரம்...


vivek
ஆக 15, 2025 05:48

இது ஒரிஜினல் ஓவியர், ஏன் என்றால் அவரால் மட்டுமே தன் இதயம் பத்திரம் என்று புலம்புவான்


vivek
ஆக 15, 2025 05:59

ஓவியமே , துப்புரவு தொழிலாளர்கள் ஒட்டும் போச்சா...யூடியூப் பாரு...கழுவி உத்திரங்க...உனக்கு மூளையும் பத்திரம்


ramesh
ஆக 14, 2025 21:30

ஏன் ஐயா இப்படி காமெடி பண்ணுறீங்க பல் இளிச்ச பழனி சாமி அவர்களே . உண்மையில் உங்களுக்கும் உங்களது கட்சிக்காரர்களுக்கு தெரியும் admk தான் வெண்டிலேட்டர் இல் உள்ளது என்று


vivek
ஆக 14, 2025 22:35

ரமேஷு...அந்த வென்டிலேட்டர் தமிழக மக்கள் எடுத்து விடுவார்கள்


Tamilan
ஆக 14, 2025 21:28

மத்திய மாநிலங்களில் உள்ள NDA அரசுகள் இந்தியாவையே வென்டிலேட்டருக்குல் அனுப்பியபின்பு உள்ளிருந்துகொண்டு புலம்புவது ஏன்


Ramesh Sargam
ஆக 14, 2025 21:10

என்னை கடலில் வீசினாலும், நான் கட்டுமரமாய் மிதப்பேன். இது கருணாநிதி வசனம். அதுபோல நாங்கள் வென்டிலேட்டரில் இருந்தாலும், மக்களுக்கு வேண்டிய இலவசங்களை கொடுத்து மீண்டும் ஆட்சியை பிடிப்போம். இது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் வசனம்.


சமீபத்திய செய்தி