உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏராளமான பயனாளர்கள் பணியாற்றி வந்தனர்.தற்போது இந்த திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து, தி.மு.க., வினர் கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே, மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் தலைமையிலும், கொண்டம்பட்டி ஊராட்சியில், கோவை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அல்தாப் உசேன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மேலும், காட்டம்பட்டி மற்றும் பிற பகுதிகளிலும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை