உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க.,வை ஓரங்கட்ட வேண்டும்

தி.மு.க.,வை ஓரங்கட்ட வேண்டும்

தி.மு.க.,வை ஓரங்கட்ட வேண்டும்

கோவை சிவானந்தா காலனியில், வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தலைமை வகித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வங்கதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நீக்கப்பட்டு, அங்கு இஸ்லாமிய அடிப்படைவாத அரசு வந்ததிலிருந்து, இந்துக்கள் நுாற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காளி மற்றும் இஸ்கான் கோவில்களை கொளுத்தியுள்ளனர். இந்துக்களுக்கு எதிராக, வங்கதேசத்தில் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு அனுதாபம் தெரிவித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட, இந்து விரோத தி.மு.க., அரசு, அனுமதி மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாலஸ்தீனத்தில் இருப்பவர்களுக்காக, குரல் கொடுக்க அனுமதிக்கும் தி.மு.க., அரசு, நமக்கு அருகே வங்கதேசத்தில் இருக்கும் 1.30 கோடி இந்துக்களுக்கு ஆதரவாக ஏன் பேசக்கூடாது?தமிழகத்தில், தி.மு.க., அரசு நீக்கப்பட்டால் தான், இந்துக்கள் சம உரிமையுடனும், கவுரவத்தோடும் வாழ முடியும். இதற்காக, நாம் வரும் 2026 தேர்தலை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் தி.மு.க.,வினர், அடுத்த தேர்தலில் ஓரம் கட்டப்பட வேண்டும். இல்லையென்றால் இந்துக்கள் சமய உரிமையோடு, தமிழகத்தில் வாழ முடியாது. இந்து கோவில்கள் இருக்காது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sainathan Veeraraghavan
டிச 05, 2024 16:50

INDIA MUST FILE A COMPLAINT WITH INTERNATIONAL COURT OF JUSTICE FOR REPRIMANDING BANGLADESH.


Rajendran Veeranan
டிச 05, 2024 16:16

ஆர் எஸ் எஸ் மோடி கும்பலே ராணுவத்த அனுப்பி இந்துமத கும்பல காப்பாத்துங்க.


Subramanian N
டிச 05, 2024 14:58

திராவிடிய மாடல் , நம் நாட்டின் பிரிவினை மாடல். மூட்டை பூச்சியை நசுக்குவதுபோல் நசுக்கவேண்டும்


Ms Mahadevan Mahadevan
டிச 05, 2024 10:14

அப்படியா


Subramanian N
டிச 05, 2024 14:55

ஆமாம் , அப்படித்தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை