உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எதிர்க்கட்சியாக கூட தி.மு.க., வராது: முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு

எதிர்க்கட்சியாக கூட தி.மு.க., வராது: முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு

பொள்ளாச்சி; 'அ.தி.மு.க., 2026ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வரும்; அப்போது தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட வராது,'' என பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 108வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. கோவை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க., ஆட்சியில், 50 ஆண்டு கால வளர்ச்சி கொடுத்தோம். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை, தற்போது முதல்வர் ஸ்டாலின் திறந்து கொண்டு இருக்கிறார். எந்த திட்டமும் செய்யாமல் ஒரு ஆட்சி இருக்கிறது என்றால் அது தி.மு.க., ஆட்சி தான். எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடக்கிறது. போலீஸ்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.வரும், 2026ம் ஆண்டு தமிழக முதல்வராக பழனிசாமி வருவார். தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட வர வாய்ப்பு கிடையாது. 200 தொகுதிகளுக்கு மேல் அ.தி.மு.க., வெற்றி பெறும். கோவை மாவட்டத்தை புறக்கணித்த தி.மு.க.,வை புறக்கணிப்போம். இவ்வாறு, பேசினார்.

உப்பு சப்பு இல்லாத பொங்கல்

எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கலுக்கு பணம், பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. 2,500 ரூபாய் வரை பணம் வழங்கி, பொங்கல் தொகுப்பு வழங்கியது அ.தி.மு.க., ஆட்சி தான். கொரோனா காலத்தில் அரசுக்கு வருமானம் இல்லையென்றாலும், அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டது.பொள்ளாச்சி மேற்கு பகுதியில், அ.தி.மு.க., ஆட்சியில் தான் தடுப்பணைகள் கட்டப்பட்டன. தற்போது நீர் நிரம்பி வருகிறது.ஆனால், தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பணம் வழங்கவில்லை. உப்பு சப்பு இல்லாத பொங்கலாக மாறியுள்ளது. ஓட்டுப்போட்ட மக்களுக்காக தி.மு.க., ஒன்றும் செய்ய இயலாது.இதனால், மீண்டும் மக்கள் அ.தி.மு.க., ஆட்சி தான் வர வேண்டும் என நினைக்கின்றனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமிகட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !