உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு, கிழக்கு தி.மு.க. ஒன்றிய கிளை மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம், பணிக்கம்பட்டியில் நடந்தது. மாவட்ட செலயாளர் முருகேசன் தலைமை வகித்தார். வடக்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பார்த்தசாரதி வரவேற்றார். கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் பேசினார்.தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயக்குமார், நிர்வாகி பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், சட்டசபை தேர்தல் பணிகள் குறித்தும், ஆட்சியின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை