யானையை கண்டால் செல்பி எடுக்கக்கூடாது
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-- கோத்தகிரி சாலையில், ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது. வாகன ஓட்டிகள் யானையை கண்டால் அதனுடன் செல்பி எடுக்க முயற்சி செய்யக் கூடாது என சிறுமுகை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில், இரு குழுக்கள் வாயிலாக வனத்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து செல்கின்றனர். யானைகள் ஊருக்குள் வரமால் தடுக்கின்றனர். யானை, சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்லும் போது, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். யானையை கண்டால் யாரும் செல்பி எடுக்கக்கூடாது என்றனர்.