உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / களைக்கொல்லியை பயன்படுத்தாதீர்; விழிப்புணர்வு முகாமில் எச்சரிக்கை

களைக்கொல்லியை பயன்படுத்தாதீர்; விழிப்புணர்வு முகாமில் எச்சரிக்கை

அன்னுார்; 'களைக்கொல்லி பயன்படுத்தாதீர்' என விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது பட்டு வளர்ச்சி துறை சார்பில் விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு, தோட்ட பராமரிப்பு மற்றும் உர மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் அன்னுாரில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் பிந்து தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற பட்டு வளர்ப்பு துறை உதவி இயக்குனர் சிவநாதன் பேசுகையில், களைக்கொல்லியை பயன்படுத்துவதால், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள், சத்துக்கள் அழிந்து விடும். அதற்கு பதில் சனப்பு, தக்கை பூண்டு, கொளுஞ்சி உள்ளிட்ட பசுந்தாள் உரங்களை பயிரிட்டு அவற்றை மக்கச் செய்ய வேண்டும், என்றார். உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசுகையில், பட்டுப்புழு வளர்ப்பு 15 நாட்கள் மட்டுமே. வேலைப்பளு குறைவு. பட்டுப்புழுவின் கழிவுகளை உரமாக பயன்படுத்தலாம். பட்டு புழு வளர்க்க பயிற்சி தரப்படும். மல்பெரி நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாயும், புழு வளர்ப்பு கூடம் 1100 சதுர அடியில் அமைக்க 2, லட்சத்து 43 ஆயிரத்து 750 ரூபாயும் வழங்கப்படும். புழு வளர்ப்பு தளவாடங்கள், கிருமி நாசினிகள் 41,250 ரூபாய்க்கு வழங்கப்படும், என்றார். 'பட்டுப்புழு வளர்ப்பு குறித்து சந்தேகம் இருந்தால் 96594 92430 என்ன மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என்றனர். இளநிலை ஆய்வாளர் கணேஷ் பாண்டி, தொழில்நுட்ப மேலாளர் லோகநாயகி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை