மேலும் செய்திகள்
208 நகர்ப்புற நலவாழ்வு மையம் இம்மாதம் திறப்பு
02-Apr-2025
கோவை: தமிழகத்தில், நகர்ப்புற பகுதிகளில் பணிக்குச் செல்லும் பலர், ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. பணிக்கு விடுமுறை எடுக்க வேண்டும் என்பதால், பலர் வருவதில்லை. பொதுமக்களின் வசதிக்காக, காலை, 8:00 முதல் மதியம், 12:00 வரை; மாலை, 4:00 முதல் இரவு, 8:00 வர செயல்படும் வகையில், 708 நகர்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2023, ஜூன் மாதம், 500 நகர்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.கோவையில் முதல்கட்டமாக, 49 மையங்கள் திறக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, 23 மையங்கள் திறக்கப்பட உள்ளன. இம்மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் தருவிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டாக்டர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. மாவட்ட பொதுத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், ''ஒவ்வொரு மையமும் தலா, 25 லட்சம் ரூபாயிதல் கட்டப்பட்டுள்ளன. இங்கு பணிபுரிவதற்கான டாக்டர்கள், செவிலியர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ''மே முதல் வாரத்தில் இம்மையங்கள் திறக்கப்பட உள்ளன,'' என்றார்.
02-Apr-2025